ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!

அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (பிப். 19) கையெழுத்திட்டுள்ளார்.

News image
கோப்பில் கையெழுத்திடும் அதிபர் டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :19 பிப்ரவரி 2025, 7:10 am

DIN

அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை கருத்தரித்தல் விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (பிப். 19) கையெழுத்திட்டுள்ளார்.

இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் ஆய்வுக்கூட சோதனை முறையில், கருத்தரிக்கலாம்.

அதிபர் டிரம்ப் இன்று இந்த உத்தரவில் கையெழுத்திட்டதன் மூலம் ஆய்வுக்கூட சோதனை முறை போன்ற சிகிச்சையில் கொள்கை திட்டங்கள் வலுவாகும் என்றும், சுகாதார திட்டச் செலவு குறையும் எனவும் கூறப்படுகிறது.

இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (ஐவிஎஃப்) என்னும் ஆய்வுக்கூட சோதனை முறையானது, ஆய்வகத்தில் முட்டை மற்றும் விந்தணுக்களை இணைத்து, பின்னர் அதனை பெண்கள் கருப்பையில் வைத்து கருத்தரிக்க உதவும் இனப்பெருக்க நுட்பமாகும்.

அமெரிக்காவில் இந்தவகை சிகிச்சைக்காக ஒரு சுழற்சிக்கு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. பல சுழற்சி சிகிச்சைக்குப் பிறகே கருத்தரித்தல் சாத்தியமாகும்.

சுகாதாரம் மற்றும் சேவைகள் துறை தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறையில் பிறந்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 2023-ல் அமெரிக்காவின் கருத்தரித்தல் விகிதம் குறைந்துள்ளது. 2022 - 2023 வரையிலான ஓராண்டில் கருத்தரித்தல் விகிதம் 3% குறைந்துள்ளது. 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 2% குறைந்துவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.