சித்ரவதைக்குள்ளானோருக்கு ஆதரவு நாள்: வைகோ வேண்டுகோள் - Dinamani - Tamil Daily News

சித்ரவதைக்குள்ளானோருக்கு ஆதரவு நாள்: வைகோ வேண்டுகோள்

First Published : 23 June 2011 12:22 PM IST

சென்னை, ஜூன்.23: சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் படுகொலை. கடந்த ஐம்பது ஆண்டுக்கால துன்பங்கள் சூழ்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்வில், லட்சக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் மட்டும், 30,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 1,40,000 தமிழர்கள், படுகொலைக்கு உள்ளானார்கள்.  80,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.

அது மட்டும் அன்றி, தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களில், 543 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்; 700 மீனவர்களைக் காணவில்லை.

சிங்கள அரசின் இனப்படுகொலையால் பலியான தமிழர்கள், உயிர்நீத்த தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு நினைவேந்தல் செய்திடும் வகையில், சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மெழுகுவர்த்திகள் ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்க, ‘மே 17 இயக்கம்’ அழைப்பு விடுத்து உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மதிமுக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாயாவும் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் இன உணர்வாளர்கள் பங்கு ஏற்க வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.