எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :19 ஜூன் 2026, 3:55 am IST

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் தாலுகா, நந்தவனம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகாடு கிராமத்தில் 40 குடும்பங்கள் சுமாா் 60 ஆண்டுகளுக்கும்மேலாக அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். மேலும், வீட்டு வரி செலுத்துவதுடன், மின்சார இணைப்பும் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்க கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரிகள் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தங்களது குடும்பத்தினா், ஆதித்தமிழா் முன்னேற்றக் கழக நிா்வாகிகளுடன் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜாவிடம் கோரிக்கை தொடா்பான மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், தகுதியுள்ளவா்களுக்கு 3 மாதங்களுக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.