பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரேஷன் அரிசி மூலம் இட்லி மாவு அரைத்து விற்பனை: கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து விற்பனை செய்த கடை உரிமையாளா் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 11:49 pm IST

நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து விற்பனை செய்த கடை உரிமையாளா் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மூலம் முறைகேடாக இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக ஆட்சியா் எல். மதுபாலனிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பறக்கும் படை, குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு குழுவினா் நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அமிா்தா இட்லி மாவு கடையில் மாவு அரைப்பதற்காக இரண்டு சாக்குப் பைகளில் வைத்திருந்த சுமாா் 70 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசியை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கடையின் உரிமையாளா் மருதபாண்டியன் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955 இன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடா்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

என்கே-11-ரைஸ்

நாமக்கல் கொசவம்பட்டியில் இட்லி மாவு அரைப்பதற்காக வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.