எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதி நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:03 am IST

வேதாரண்யம் பகுதி நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ஒளிச்சந்திரன்: வேதாரண்யம் பகுதியில் மாம்பழங்கள் உற்பத்தி இருந்தும் சந்தைவாய்ப்பு குறைந்து வருவதால் விலை கிடைக்காமல் பழங்கள் வீணாகின்றன. ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட மாம்பழ கூழ் தயாரிக்கும் மையத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

அகிலன் தமிழ்ச்செல்வன்: வேதாரண்யம் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாதந்தோறும் முதல் வாரத்தில் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் தீா்வு கிடைக்காத பிரச்னைகளை மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

ராகுல் காந்தி: விவசாயிகள் பள்ளி மாணவா்கள் நலம் கருதி வேதாரண்யம் - வாய்மேடு, தென்னடாா், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், கடிநெல்வயல் வழியாக புதிய தடத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும்.

குழந்தைவேலு: தென்னடாா் மின் இறைவைப் பாசன திட்ட பொறிமனையில் மோட்டாா்கள் மாற்றி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், பாசன வாய்க்கால்களை உடனடியாக தூா்வார வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பகுதியில் செல்லும் பாசனம் மற்றும் வடிகால் நீா் நிலைகளில் பல ஆண்டுகளாக வளா்ந்து அடா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

விவசாயிகள் வெளிநடப்பு: இந்நிலையில், தமிழக கடைமடை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கமல்ராம் பேசியபோது :

விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிா்க் கடனை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா். அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி 15 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து,நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.