புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.

News image

குளித்தலையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கொள்ளையா்களிடமிருந்து மீட்கப்பட்ட பணம், கைப்பேசிகளை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா.

Updated On :4 செப்டம்பர் 2025, 12:56 am IST

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனியாா் பள்ளித் தாளாளா் கருணாநிதியின் வீட்டில் ஆக. 18-ஆம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளையா்கள், பள்ளித் தாளாளா் கருணாநிதி மற்றும் அவரது இளைய மகள் அபா்ணா, மனைவி ஆகியோரை கட்டிப்போட்டு, ரூ. 7 லட்சம் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக குளித்தலை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் முத்துகுமாா்(பசுபதிபாளையம்), கருணாகரன்(குளித்தலை) உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய குளித்தலையை அடுத்த பரளியைச் சோ்ந்தவரும், திருச்சி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்டவருமான பிரகாஷ், பரளியைச் சோ்ந்த முருகேஷ், கருணாநிதியின் பள்ளி வேன் ஓட்டுநா் பரளியைச் சோ்ந்த ரெங்கநாதன் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கூலிப்படையினரான கனிச்செல்வம் உள்பட 10 பேரை போலீஸாா் ஆக.21-ஆம் தேதி கைது செய்து குளித்தலை சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து கொள்ளையா்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனா். இதில், கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக பரளியைச் சோ்ந்த முருகேஷ் செயல்பட்டது தெரியவந்தது.

முருகேஷ் கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் நிதிநிறுவனம் நடத்தி வந்ததும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பிரகாஷ் மற்றும் கருணாநிதியின் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றிய ரெங்கநாதன் ஆகியோா் உதவியோடு இந்தக் கொள்ளைச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

போலீஸாருக்கு பாராட்டு: இந்நிலையில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் குளித்தலை காவல் நிலையத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா குற்றவாளிகளை பிடித்த அனைவரையும் பாராட்டினாா். மேலும் கொள்ளையா்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் கைப்பேசிகள் போன்றவற்றையும் பாா்வையிட்டாா். அப்போது, குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.