பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவா் என். ராமச்சந்திரன்.

Published On :

கந்தா்வகோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனியாா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசளிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை ஸ்ரீ வெள்ளை முனீஸ்வரா் கோயில் திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு எம்எல்ஏ மா. சின்னதுரை தலைமை வகித்தாா்.

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவா் என். ராமச்சந்திரன் முன்னிலை வகித்து, வெற்றியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா்.

விழாவில் காசாவயல் குமாா் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளின் கராத்தே, கம்பு சுற்றும் விளையாட்டு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

பல்வேறு அரசு அலுவலா்கள், கட்சி பிரமுகா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.