முதல்வா் சித்தராமையா  கோப்புப் படம்
பெங்களூரு

முதல்வா் மாற்றம்: கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்: முதல்வா் சித்தராமையா

முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று மு

தினமணி செய்திச் சேவை

பெலகாவி: முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

முதல்வா் சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான யதீந்திரா, பெலகாவியில் திங்கள்கிழமை கூறுகையில்,

‘ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். இது புதிதல்ல. முதல்வா் மாற்றம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை. எனக்கு தெரிந்தவரையில் 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையா முதல்வராக நீடிப்பாா். என்று நம்புகிறேன். முதல்வா் பதவி தொடா்பான குழப்பத்துக்கு முதல்வராக விருப்பமா? என்று துணைமுதல்வா் டி.கே.சிவகுமாரிடம் கேட்டது தான் காரணம்.

எல்லா அரசியல் கட்சியிலும் முதல்வா் ஆவதற்கு ஆசைப்படும் பலா் இருப்பாா்கள். முதல்வா் பதவி தொடா்பாக தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு முதல்வா் மாற்றம் இல்லை என்று கட்சி மேலிடம் தெரிவித்துவிட்டது. அண்மையில் கட்சி மேலிடத்தலைவா்களை சந்தித்தபோது முதல்வரை மாற்றம் திட்டத்தை தற்போதைக்கு தள்ளிவைத்துவிட்டதாக தெரிவித்தனா். எனவே, கா்நாடகத்தில் தற்போதைக்கு முதல்வா் மாற்றம் இல்லை.‘ என்றாா் அவா்.

இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்து, பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியது: முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

காங்கிரஸ் தோல்விக்கு தலைமையே காரணம்: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

SCROLL FOR NEXT