பெங்களூரு

பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம்: எம்.பி.யுவராஜ்

கர்நாடகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம் செய்யும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலர் எம்.பி.யுவராஜ் தெரிவித்தார்.

DIN

கர்நாடகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம் செய்யும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலர் எம்.பி.யுவராஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தனது கூட்டணியில்,  பாஜக,  பாமக, தேமுதிகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலுக்காக வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளது. 
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் மண்டியா நீங்கலாக 27 தொகுதிகளில் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 27 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவளிக்கிறது. 
27 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம் செய்யும்.  மத்திய பெங்களூரு, வடபெங்களூரு, தென் பெங்களூரு, கோலார், மைசூரு, சிவமொக்கா, மைசூரு தொகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவர்.  இதற்காக ஆங்காங்கே அதிமுக தேர்தல்பிரசாரக்கூட்டங்களை நடத்தும். 
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏப்.18-ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவிருக்கிறோம்.  இதற்காக கர்நாடக அதிமுக குழு தமிழகம் செல்லும். ஒசூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சனிக்கிழமை சந்தித்தோம். அப்போது கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க,   பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் அதிமுகவின் முடிவை தெரிவித்தார் என்றார் யுவராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT