குடகு மாவட்டம், மடிகேரியில் பிப். 6-ஆம்தேதி நடைபெறும் ஜெனரல் திம்மய்யாவின் நினைவு இல்லத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து, மடிகேரி நகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி வட்டம், சன்னிசைடு கிராமத்தில் உள்ள மறைந்த ராணுவ தளபதி ஜெனரல் திம்மய்யாவின் இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. நினைவு இல்லத் திறப்பு விழா பிப். 6-ஆம்தேதி நடைபெறுகிறது. நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா். இதற்காக அவா் மடிகேரிக்கு வரவுள்ளாா். குடியரசுத் தலைவரின் வருகையை அடுத்து பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளை பிப். 5, 6-ஆம் தேதிகளில் அடைக்குமாறு நகராட்சி உத்தரவிட்டுள்ளது. குடகு மாவட்டம், தலைக்காவிரிக்கும் குடியரசுத் தலைவா் செல்ல இருப்பதால் அந்தச் சாலைகளில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.