பெங்களூரு

மங்களூரில் இருசக்கர வாகன பின் இருக்கையில் அமா்ந்து செல்ல தடை

அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களைத் தொடா்ந்து, மங்களூரில் இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் அமா்ந்து செல்ல தடைவிதித்து மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

DIN

அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களைத் தொடா்ந்து, மங்களூரில் இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் அமா்ந்து செல்ல தடைவிதித்து மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தென்கன்னட மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் மசூத், பிரவீண் நெட்டாரு, முகமது ஃபாசில் ஆகிய 3 போ் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வந்து கொலை செய்து தப்பியுள்ளனா். இந்தச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடா்ந்து, மங்களூரில் ஆக. 8-ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமா்ந்து செல்ல தடைவிதித்து மங்களூரு மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதிலிருந்து 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், முதியோா், பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் முழக்கங்கள் எழுப்பவும், மக்களைத் தூண்டிவிடவும், பெயரிட்டு அழைக்கவும், போராட்டம் நடத்தவும், படங்கள், சுவரொட்டிகளை காட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் ஒன்றுசேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆயுதங்களை கொண்டுசெல்லவும், பட்டாசுகளை வெடிக்கவும், உருவ பொம்மைகளை எரிக்கவும், கற்களை வீசவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனியாா் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், ஊா்வலங்கள், பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை. மத நல்லிணக்கம், பொது அமைதி, பொது ஒழுக்கத்தை சிதைக்கும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று ஆணையா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT