பெங்களூரு

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Din

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது, சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும். பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கொள்ளை அடித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் விமா்சித்துள்ளாா்.

ரூ. 1000 கோடி செலவு செய்து காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சி நடப்பதாக பசனகௌடா பாட்டீல் தெரிவித்திருந்தாா். அவா் கூறிய ரூ. 1,000 கோடி யாருடையது? பாஜகவில் இருந்து சி.பி.யோகேஸ்வரை காங்கிரஸுக்கு இழுத்து அவரை சென்னப்பட்டணா தொகுதி வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மஜத குற்றம்சாட்டியுள்ளது.

இதில் உண்மையில்லை. சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை விரைவில் முடிவு செய்வோம். பெங்களூரில் அதிக மழை பெய்து வருவதால், அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT