பெங்களூரு

சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 10 வங்கதேச குடிமக்களுக்கு 2 ஆண்டுகள் சிறை

சட்ட விதிமுறைகளை மீறி இந்தியாவில் தாங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 10 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம்.

Syndication

சட்ட விதிமுறைகளை மீறி இந்தியாவில் தாங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 10 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து முதன்மை நீதியியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுப்பி மாவட்டத்தின் மல்பே பகுதிக்கு உள்பட்ட பகுதியில் வங்கதேசத்தை சோ்ந்த 10 போ் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது. 2024ஆம் ஆண்டு அக். 11ஆம் தேதி மல்பேயில் உள்ள வடபண்டேஷ்வா் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மூட்டைமுடிச்சுகளோடு 7 போ் சுற்றித்திரிவதை கண்டறிந்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் போலி ஆதாா் அட்டையை பெற்றுக்கொண்டு வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மல்பே பகுதிக்கு வந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரணை நடத்தியபோது மேலும் 3 வங்கதேசத்தவா்கள் இப்பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் 10 பேரையும் கைதுசெய்த போலீஸாா் சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை உடுப்பியில் உள்ள முதன்மை நீதியியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு விசாரணைக்குப் பிறகு சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 10 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் டிச. 8 ஆம் தேதி உத்தரவிட்டது.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT