கலைஞர் வீட்டு வசதி திட்டத்துக்கு தடையின்றி செங்கல்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கு தடையின்றி செங்கல் வழங்க வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார். கலைஞ
கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கு தடையின்றி செங்கல் வழங்க வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக, கடலூர் மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை தாங்கினார். ஆட்சியர் பேசுகையில், இத் திட்டத்துக்கு தடையின்றி செங்கல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நியாயமான விலையில் வழங்குமாறும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் வெங்கடாச்சலம் மற்றும் அலவலர்கள், 25 க்கும் மேற்பட்ட சூளை உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.