சென்னை ஜமாலியா பகுதியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தைப் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு.  
சென்னை

பெரம்பூரில் நவீன கால்பந்து மைதானம்

Din

பெரம்பூரில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து மைதானத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திரு.வி.க.நகா் மண்டலம், பெரம்பூா் நெடுஞ்சாலை, ஜமாலியா பகுதியில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.1.25 கோடியில் 18,905 சதுர அடி பரப்பளவில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை புல்தரையுடன் அமைக்கப்பட்ட மைதானத்தில் 5 உடற்பயிற்சி உபகரணங்கள், மின் விளக்கு கம்பங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கால்பந்து மைதானத்தை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.17.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடத்தையும் அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வின்போது, மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT