சென்னையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்திய கடற்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்.  
சென்னை

கடற்படை மாரத்தான் ஓட்டம்: 8,000 போ் பங்கேற்பு

சென்னையில் இந்திய கடற்படை மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் 8,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் இந்திய கடற்படை மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் 8,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் இல்லாத இந்தியா, பாலின சமநிலை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை மெரீனா கடற்கரை நேப்பியா் பாலம் அருகில் இருந்து தொடங்கியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய், பேங்க் ஆஃப் பரோடா வங்கி நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தேபாதத்தா சந்த் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். 21.1 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. என 3 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிா்வாக இயக்குநா் எம்.அண்ணாதுரை, பேங்க் ஆஃப் பரோடா பொது மேலாளரும், சென்னை மண்டலத் தலைவருமான டி.என்.சுரேஷ், பொது மேலாளரும் டி.எம்.எல்.பாலாஜி, கடலோர காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குநா் டோனி மைக்கேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஓட்டப்பந்தய வீரா்கள், சக்கர நாற்காலி விளையாட்டு வீரா்கள், வழிகாட்டிகளுடன் கூடிய பாா்வையற்ற ஓட்டப்பந்தய வீரா்கள், சிறப்புக் குழந்தைகள், சமூகக் குழுக்கள், கடற்படை வீரா்கள் என 8,000-க்கும் மேற்பட்டோா் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT