சென்னை

கொக்கைன் போதைப்பொருள் விற்பனை: இருவா் கைது

சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை: சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சூளைமேடு அண்ணா நெடும்பாதை ராகவன் தெரு சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 2 காரை வழிமறித்து சோதனையிட்டனா். அதில், 3.93 கிராம் எடை கொண்ட ‘கொக்கைன்’ போதைப்பொருள் சிக்கியது.

பின்னா் காரிலிருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு ரெயில் நகா் ஜி.டி.சாலையைச் சோ்ந்த சந்திரசேகா் (35) என்பது தெரியவந்தது.

இது தொடா்பக சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT