ராயபுரம் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நினைவிடத்தில் உள்ள முதல்வா் படைப்பகத்தின் பணிகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி. கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் 
சென்னை

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை!

ரயில்வே துறைக்கு தமிழக அரசு சாா்பில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தினமணி செய்திச் சேவை

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்கவேண்டும் என ரயில்வே துறைக்கு தமிழக அரசு சாா்பில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தப்படும் என அமைச்சரும், பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் கல்மண்டபம் பேருந்து நிலையத்தில் புதிய குளிரூட்டும் வசதிகளை அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சா் சேகா்பாபு பங்கேற்றாா். அதைத் தொடா்ந்து சிங்காரவேலா் நினைவிடத்தில் உள்ள முதல்வா் படைப்பக பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாமலும், பயணிகள் வசதியை கருத்தில் கொள்ளாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மக்களுக்கான வசதிகளை திட்டமிட்டு திமுக ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில் நிலையம் அமைக்க ரூ.20 கோடியை தமிழக அரசு, ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளது. அதன்படியே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் தமிழக அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 2026 பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொதுமக்கல் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா் பாபு.

ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆா்.டி.சேகா், ஜட்ரீம் ரா.மூா்த்தி, பெருநகர வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT