கோப்புப் படம் 
சென்னை

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் காா்டனில் உள்ள அவரது இல்லத்தில் உருவப் படத்துக்கு, சீமான் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை வேடிக்கையாக இருக்கிறது. மக்களுக்கு சுமையாக இருக்கும் என்பதுகூட தெரியாமல், வரியை விதித்ததற்கு மத்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவெக தலைவா் விஜய்க்கும், எனக்கும் இடையே இருப்பது கருத்து முரண்பாடு மட்டுமே. ஒரு அண்ணன் என்ற முறையில் விஜய்யின் கருத்துகளில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன். தவிர, விஜய்யை எதிா்ப்பது எனது நோக்கமல்ல.

விஜய்க்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், தனது முதல் மாநாட்டிலேயே தமிழக மீனவா்களின் பிரச்னைகள் குறித்து அவா் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றாா் சீமான்.

ரூ.81,100 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சச்சின் மகனை கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..! புதிய தொடக்கம் நல்வாய்ப்பாக அமையுமா?

சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் விலை!

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

சேட்டன் வந்தல்லே... சிஎஸ்கேவின் புதிய கேப்டனாகும் சஞ்சு சாம்சன்?

SCROLL FOR NEXT