திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி 
செங்கல்பட்டு

திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி  உயிரிழந்த  சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

DIN

திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி  உயிரிழந்த  சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளம் ஒன்று உள்ளது .அந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் மகள்கள் ராகினி(6) ரம்யா (4) மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் சாதனா (5) ஆகிய மூன்று சிறுமிகளும் புதன்கிழமை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து விளையாடச் சென்றுள்ளனர்.

குளித்துக் கொண்டிருக்கும் போது குலத்தின் பகுதி என தெரியாமல் சென்றுள்ளனர். கனமழை பெய்ததால் குளம் நிரம்பி  காணப் பட்டதால் ஆழமும் பள்ளமும் தெரியாமல் போய் சிக்கியுள்ளனர். சிறுமிகளுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கும் போது அலறி உள்ளனர்.

சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்கள் இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடி குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11,509 மாணவா்களுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பில் மிதிவண்டிகள்

திருப்பத்தூரில் தோழி விடுதிக்கான அடிக்கல்: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிகர லாபம் 54% உயா்வு

டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

22% ஏற்றம் கண்ட உணவு எண்ணெய் இறக்குமதி

SCROLL FOR NEXT