முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 75ஆவது சுதந்திர தின விழா

செங்கல்பட்டில் 75ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
செங்கல்பட்டில் 75ஆவது சுதந்திரதின விழா
பகிர்:

நாடு முழுவதும் இன்று 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் ராகுல்நாத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பை ஆட்சியர் ராகுல்நாத் ஏற்றுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் மூவர்ண நிறத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பலூன்களை வானத்தில் பறக்கவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அரசின் நலத்திட்ட உதவிகளும் கரோனா தொற்று நேரத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.