செங்கல்பட்டு: பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை யொட்டி விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் தினவிழாவுக்கு குழந்தைகள் நல குழுமம் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏசிடிஎஸ் சைல்டு லைன் 1098 இயக்குநா் தேவன்பு முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏஞ்சலோ இருதயசாமி வரவேற்றாா்.
இதில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சாா்ந்த அலுவலா் தயாளன், காஞ்சிபுரம் சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளா் ஜான்பிரபு மற்றும் சைல்ட் லைன் அணி உறுப்பினா்கள் ஆவிஸ் அற்புதம், கீதாஞ்சலி, சகாயமேரி ஷீபா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இறுதியாக பள்ளி தலைமையாசிரியா் அருணா நன்றி கூறினாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு அலிசன் காசி பெண்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.