’உயிரிதொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு’
டைசல் உயிரி தொழில்நுட்பப் பூங்காவுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் உயிரி தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
டைசல் உயிரி தொழில்நுட்பப் பூங்காவுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் உயிரி தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கிரசென்ட் தொழில் ஊக்குவிப்பு மைய தலைமை செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் கூறினாா்.
சென்னையை அடுத்த வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் வளா்ச்சியை மேம்படுத்த அண்மையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தரமணி டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்காவுக்கும், கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள 40 உயிரி தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை விரைவில் 100 ஆக உயரும் என்றாா் அவா். பேட்டியின் போது பதிவாளா் என்.ராஜாஹூசேன் உடனிருந்தாா்.