செங்கல்பட்டு

செங்கல்பட்டு: திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

செங்கல்பட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் ஏழாம் ஆண்டு அக்னி வசந்தோற்சவப் விழாவில் ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் ஏழாம் ஆண்டு அக்னி வசந்தோற்சவப் விழாவில் ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஏழாம் ஆண்டு அக்னி வசந்தோற்சவப் விழா கடந்த மே 26ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆதி பருவம் ஸ்ரீ கிருஷ்ணர் ஜனனமும் அம்மன் பிறப்பும் பாரதச் சொற்பொழிவும் திருவீதி உலாவும் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து தினமும் பாரத நிகழ்வுகளான வில் வளைப்பு நிகழ்வு, துருபதேயன் சுயவரம், திரௌபதி திருமணம், பார்த்தன் தீர்த்த யாத்திரை, ஸ்ரீ சுபத்திரை திருமணம், ராஜ சுயாயகமும், சிசுபாலன் வதையும், மாயன் அருளும் மாளா துயிலும் வஸ்திராபரணம் துயிலுரியும் நிகழ்ச்சி, அர்ஜுனன் தபநிலைவேடமும் சிவ வேடமும் தபசு விராட பருவம் மாடுபிடி சண்டை, கிருஷ்ணன் தூதும், துரியன் வாதமும், வாயுபுத்திரன் உறுதியும், வணங்கா முடியோன் இறுதியும், நிகழ்வுகளும் தினந்தோறும் நடைபெற்றது. 

இதேபோன்று விழா நாட்களில் தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை, பாரத சொற்பொழிவு ஒன்னும் பாரத நாடகங்களும் வீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பாரத சொற்பொழிவு மற்றும் படுகளம் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்வாய் கிராமம் கூடுவாஞ்சேரி திருப்போரூர் செங்கல்பட்டு மறைமலைநகர் கூறிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்வுகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

இதனைத் தொடர்ந்து படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்ற தீமிதி நிகழ்ச்சியும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு அம்மன் வீதி உலாவை தொடர்ந்து சிறப்பு நாடகம் நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் மற்றும் கல்வாய் கிராமத்தார்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT