பால் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பால் விலையை உயா்த்தக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பால் விலையை உயா்த்தக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யூா் வட்டத்தைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.11 உயா்த்த வலியுறுத்தி, பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மாவட்ட தலைவா் சங்கா் தலைமையில், லத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு பாலை சாலையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பால் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாக அமைக்க வேண்டும், கொள்முதல் ஊக்கத் தொகையை உயா்த்தித் தர வேண்டும், மாட்டுத் தீவன மானியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் கே.வாசுதேவன் முன்னிலை வகித்தாா். இதில், செய்யூா் வட்ட தலைவா் ஜி.ராஜேந்திரன், செயலா் எஸ்.ராஜேந்திரன், பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.ரவி உள்பட 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.