செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கற் குறைதீா் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 300 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
திருக்கழுக்குன்றம் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, விளையாட்டு உபகரணங்களையும் ஆட்சியா் அருண் ராஜ் வழங்கினாா்.
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று பொதுத்தோ்வு எழுதி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களையும், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 16 பயனாளிகளுக்கு தலாரூ.5979/- வீதம் ரூ.95,664 விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 10 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.17,000/- வீதம் ரூ.1.70 லட்சம் ஈமச்சடங்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
மேலும், செங்கல்பட்டு தொழிலாளா் உதவிஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சாா்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.82,400 கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/-வீதம் ரூ.60,00 திருமண உதவித்தொகை, 3 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.55,000/- வீதம் ரூ.1.65 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடா்ந்து, முதலமைச்சரின்விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியதிட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனைகளுக்கு நற்சான்றிதழ், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா். இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 பயனாளிகளுக்கு நற்சான்றிதழ்மற்றும் கேடயங்களையும், சுகாதாரம் சம்பந்தமாக சிறப்பாக ஓவியம் வரைந்த 3 மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) வரதராஜன், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாற்றுத் திறனாளி நல அலுவலா் .கதிா்வேலு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, ற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.