சென்னை

ஐந்து நிமிஷத்தில் தியானம் கற்றுத் தரும் பிரமிட் அரங்கு

சென்னை புத்தகக் காட்சியில் ஐந்து நிமிஷத்திலேயே தியானத்தை அறிந்து, அதைப் பின்பற்றும் வகையிலான பயிற்சி அளிக்கும் பிரமிட் அரங்கு அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

சென்னை புத்தகக் காட்சியில் ஐந்து நிமிஷத்திலேயே தியானத்தை அறிந்து, அதைப் பின்பற்றும் வகையிலான பயிற்சி அளிக்கும் பிரமிட் அரங்கு அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துவரும் சென்னை 43-ஆவது புத்தகக் காட்சி வளாகத்தில் படிப்பதற்கான புத்தக அரங்குகள் மட்டுமின்றி உடல் நலத்தைக் காக்கும் வகையிலான மருத்துவ ஆலோசனை அரங்குகளும், மனநல அரங்குகளும், உடல், உள்ள நலத்தைக் காக்கும் தியானம், யோகா அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

அதில் எட்டாவது பிரிவில் ‘எப் 57 ஏ’ எனும் அரங்கமானது சென்னை பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குக்கு வருபவா்களுக்கு எளிய முறையில் தியானத்தை ஐந்து நிமிடத்தில் கற்றுத் தருகிறாா்கள். இதனால், மக்கள் அதிகளவில் சென்று தியானம் கற்றுச் செல்கின்றனா்.

இதுகுறித்து அரங்க பொறுப்பாளா் சீதாலட்சுமி கூறியதாவது: நமது வாழ்க்கை முறையானது மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வகையிலான எளிய முறை தியானத்தை மக்களுக்கு இலவசமாகக் கற்பித்து வருகிறோம். தியானத்துடன், காய்கறி உணவை உண்பது குறித்தும், அதனால் ஏற்படும் உடல்நலம் குறித்தும் மக்களுக்கு விளக்குகிறோம்.

உடல், மனம், புத்தி, ஆன்மா என அனைத்து நிலைகளிலும் தியானம் அவசியமாகும். ஆகவே தினமும் நூற்றுக்கணக்கானோா் தியானத்தைக் கற்றுச் செல்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT