சென்னை

கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருத்தான க்ளெவிரா மாத்திரை,  சிரப்பை அபெக்ஸ் லெபாரட்டரீஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

DIN


சென்னை:  கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருத்தான க்ளெவிரா மாத்திரை,  சிரப்பை அபெக்ஸ் லெபாரட்டரீஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் சுபாஷினி வணங்காமுடி, விசாகம் வணங்காமுடி, மேலாளர் மருத்துவர் ஆர்தர் பால் ஆகியோர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:  
லேசான, மிதமான கரோனா தொற்றுக்கு அபெக்ஸ்  நிறுவனம் க்ளெவிரா  மாத்திரை, சிரப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மருந்து முதல்கட்டமாக ஆய்வகத்திலும், விலங்குகளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறந்த முடிவு வந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட 5 நாள்களில் 86 சதவீத தொற்றும், 10 நாள்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியுள்ளது.
இந்த மருந்துக்கு இந்திய மருத்துவம், ஆராய்ச்சி கழகமும் ( ஐசிஎம்ஆர்) ஆயுஷ் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்தைப் பொதுமக்கள் அச்சமின்றி கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.  அதன்படி, க்ளேவிரா மாத்திரையைக் காலை மற்றும் இரவு உணவைச் சாப்பிட்ட பின்பு உட்கொள்ளவேண்டும். அதேபோல சிரப்பை காலை மற்றும் மாலையில் 10 எம்எல் அளவுக்குப் பருகவேண்டும். 
மாத்திரை மற்றும் சிரப்பின் விலை மிகவும் குறைவானது. இந்த மருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பாதுகாப்பானது. எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஒரு மாத்திரையின் விலை ரூ.11 ஆகும். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்தை உட்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் க்ளெவிரா மருந்தை கொள்முதல் செய்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.
முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்தபோது, க்ளெவிரா மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உரிய பரிசோதனைகளுக்குப்பின் டெங்கு பாதித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. நோயாளிகள் டெங்குவில் இருந்து விரைவாக குணமடைந்தனர். க்ளெவிரா மருந்து டெங்குகாய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக இருந்தது. இந்நிலையில், க்ளெவிரா மருந்து தற்போது கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்தானது பப்பாளி, காட்டு வேம்பு, நில வேம்பு, காட்டுப் பேய் புடல், கோரைக் கிழங்கு, இஞ்சி, மிளகு, பற்படாகம், சிந்திவ் கொடி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
நிகழ்ச்சியில் அலோபதி மருத்துவர் சிஎம்கே ரெட்டி, ஆயுர்வேதா மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன், சித்த மருத்துவர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்கா எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT