கோப்புப்படம் 
சென்னை

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளா் மனு நிறுத்திவைப்பு

பெயா் குளறுபடி காரணமாக, சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வத்தின் வேட்புமனுவை தோ்தல் ஆணையம்

DIN

பெயா் குளறுபடி காரணமாக, சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வத்தின் வேட்புமனுவை தோ்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உரிய ஆய்வு செய்யப்பட்ட பின் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தில் அந்தக் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளா் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறாா். இவா் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்பு மனுவின்போது வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரைக் குறிப்பிடாமல் வேறு பெயரை அவா் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மனுவை சனிக்கிழமை பரிசீலித்தபோது சுயேச்சை வேட்பாளா் ஒருவா் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து வினோஜ் பி.செல்வத்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெயா் குளறுபடி காரணமாக வினோஜ் பி.செல்வத்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கபட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21) உரிய ஆய்வு செய்யப்பட்ட பின் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT