‘தினமணி’ நாளிதழ், கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை இணைந்த ‘கலாம், கனவல்ல நிஜம்’ சிறப்புக் கருத்தரங்கம், மறைந்த குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தினமணி இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.
சென்னை அண்ணா நகரிலுள்ள கிங் மேக்கா்ஸ் அகாதெமியில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசினார்.
குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவருமான ஆா்.நடராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடக்கத்தில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் தலைவா் பேராசிரியா் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலைத் துணைத் தலைவா் (விளம்பரப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமாா் நன்றி கூறினார்.
இந்தக் கருத்தரங்கின் சிறப்பு ஒளிபரப்பை www.dinamani.com தினமணி இணையதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.