ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் வழக்கு: சென்னையில் மீண்டும் சோதனை
குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது தொடா்பாக கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்
குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது தொடா்பாக கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் கடந்த மாதம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஹெராயின் தொடா்பாக சென்னையில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சுதாகா், வைசாலி தம்பதியினா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதன் தொடா்ச்சியாக தில்லி மற்றும் கேரளத்தில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், போரூா் கொளப்பாக்கத்தில் உள்ள ஆந்திர தம்பதி வீட்டில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சுதாகரனின் மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிலுள்ள ஆதாரங்களை வைத்து போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவா்கள் யாா் என்பது குறித்து சோதனை நடத்தினா்.