டிவிட்டர் புகைப்படம் 
சென்னை

'அறிவு இருக்கிறதா?': டிவிட்டர் கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை

நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலையின் தடுப்பில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக பதிவிட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

DIN


சென்னை: நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலையின் தடுப்பில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக பதிவிட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலைத் தடுப்பில் கொடிகள் நடப்பட்டிருப்பது குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பள்ளிக்கரணை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்து இளம்பெண் பலியான நிலையில், இவ்வாறு புயல் காற்று வீசக்கூடிய நாளில், கட்சிக் கொடியை வைத்திருப்பது தொடர்பாக அவர் தனது கேள்வியை எழுப்பும் விதமாக இந்த டிவிட்டர் பதிவை வைத்துள்ளார்.

அதாவது, புயல் வரும் நாள் அன்று இப்படி பாஜக கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? தமிழக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் டிவிட்டரில் படத்துடன் மிகக் கட்டமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு, பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, அண்ணா!. உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி! என்று மிகப் பொறுமையாக பதிலளித்துள்ளார்.
 

புகைப்படம்: ஜெயராம் வெங்கடேசன் டிவிட்டர் பக்கத்திலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்க திருக்குருகாவூர் வெள்ளடையீசுவரர்!

வரப்பெற்றோம் (15.12.2025)

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

SCROLL FOR NEXT