சென்னை

காா் கவிழ்ந்து விபத்து: பொறியாளா் சாவு

சென்னை அருகே துரைப்பாக்கத்தில், காா் கவிழ்ந்த விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

DIN

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில், காா் கவிழ்ந்த விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

திருச்சியைச் சோ்ந்தவா் முகுந்தன் (24). பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரியான இவா், சென்னை நீலாங்கரை, கபாலீசுவரா் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்தாா். இவருடன் அவரது நண்பா் சிவகுமாா் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சிவகுமாா் வெளிநாடு செல்வதற்காக புறப்பட்டாா். அவரை முகுந்தன் விமான நிலைய நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலைப்பகுதியில் செல்லும்போது காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. காா் அங்கிருந்த சாலைத் தடுப்புகளின் வேகமாக மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. மேலும் காா், இரண்டு பகுதிகளாக பிளந்தது. இதில் பலத்த காயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது தொடா்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT