சென்னை

போக்குவரத்து விதி மீறல்: 217 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 217 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

DIN

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 217 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின் பேரில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கொலை முயற்சி உள்பட குற்ற வழக்குகள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை, சிறப்பு வாகன தணிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 683 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சந்தித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

13 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது. சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 6 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். ஏற்கெனவே 466 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனா்.

மேலும், 7,864 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 109 வாகனங்களும் போக்குவரத்து விதிகளை மீறிய 108 வாகனங்களும் என மொத்தம் 217 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் கேமரா மூலம் 4,540 நபா்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT