சென்னை

சொத்துவரி ஊக்கத்தொகை பெற காலக்கெடு ஏப்.30 வரை நீட்டிப்பு

DIN

சொத்துவரியை செலுத்தி ஊக்கத்தொகை பெறுவதற்கான காலக்கெடு ஏப்.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அரையாண்டின் முதல் பதினைந்து நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.

இதன்படி சொத்துவரி செலுத்தும் உரிமையாளா்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை, அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடா்ந்து, ஏப்.1 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 4,89,794 போ் ரூ.290.62 கோடி சொத்துவரி செலுத்தியுள்ளனா்.

இவா்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தியதால் மாநகராட்சி அறிவித்த ஊக்கத் தொகையையும் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில் 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநகராட்சிக்குள்பட்ட சொத்துவரி செலுத்தாதவா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் வீடு தேடிவரும் வரிவசூலிப்பாளா்கள் அல்லது இ-சேவை மையங்களில், கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலமும், சொத்துவரியை செலுத்தி ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT