சென்னை

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை நகைக்கடையில் 9 கிலோ தங்கம் திருட்டு

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் திருட்டுப்போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் திருட்டுப்போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் நகைக்கடையில், நேற்று இரவு திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். நகைக்கடையின் ஷட்டரை வெல்டின் மெஷினால் வெட்டி கடைக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

நகைக்கடையிலிருந்து 9 கிலோ தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட வைர கற்களின் விலை 20 லட்சம் வரை இருக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் வாய்மொழியாக அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT