சென்னை

நேரலையாக போக்குவரத்து கண்காணிப்பு: வாகன ஓட்டிகளுக்கு கிடைக்குமா நிம்மதி?

DIN


சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 300 முக்கிய சாலை சந்திப்புகளில் நேரடியாக போக்குவரத்துக் கண்காணிப்பு திட்டத்தை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.

சாலையின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, நேரடியாக போக்குவரத்தைக் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இணையதள வரைபடங்களில், சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நிலைமை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை  திட்டமிடவும், வாகன நெரிசல் ஏற்பட்ட சாலை, மேற்கொண்டு கடும் நெரிசலை எட்டுவதற்குள், அந்த சாலையில் போக்குவரத்தை அனுமதிக்காமல், மாற்றுப் பாதைகளுக்கு வாகன ஓட்டிகளைத் திருப்பி விட போக்குவரத்துக் காவலர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்த திட்டம் குறித்து கூறப்படுகிறது.

தற்போது போக்குவரத்து நெரிசலைக் கையாள ஏதேனும் போக்குவரத்து மாற்றங்களை செய்வதாக இருந்தால், அதனை முதலில் சோதனை முயற்சியாக செய்துபார்த்துவிட்டு நடைமுறைப்படுத்துவதை போக்குவரத்துக் காவல்துறையினர் பின்பற்றி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில், அண்ணாசாலை அல்லது வடபழனி 100 அடி சாலையில் யு-டர்ன் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் இது சோதனை முயற்சியாக செய்யப்பட்டு, வெற்றி பெற்றால் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம், மழைக்காலம் மற்றும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் நாள்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயணளிப்பதாக இருக்கும் என்றும், இதனை வாகன ஓட்டிகள் செல்லிடப்பேசி செயலிகள் வாயிலாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தால் மாபெரும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT