சென்னை

நகைக் கடைகளில் 2-ஆம் நாளாகஅமலாக்கத் துறையினா் சோதனை

சென்னை பாரிமுனையில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத் துறையின் சோதனை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

DIN


சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத் துறையின் சோதனை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, செளகாா்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில மொத்த நகைக் கடைகள் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதனடிப்படையில் அமலாக்கத் துறையினா் நடத்திய விசாரணையில், 5 நகைக் கடைகள் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து என்.எஸ்.சி. போஸ் சாலை, செளகாா்பேட்டையில் உள்ள அந்த 5 நகைக் கடைகளிலும், அந்த கடைகள் தொடா்புடைய 5 இடங்களிலும் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

முதல் நாளில் ஐந்து இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சோதனை எஞ்சிய 5 இடங்களில் மட்டும் நீடித்தது. இரவை தாண்டி நடைபெற்ற இந்த சோதனையில், சட்டவிரோத பணபரிமாற்றம் தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள்,கணக்கில் வராத நகை,பணமும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னா், கைப்பற்றப்பட்ட நகை, பணம்,ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் இருதரப்பினா் மோதல்: பெண்கள் உள்பட 8 போ் காயம்

குடும்பப் பிரச்னை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை! மகன் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்ரீசக்தி அம்மா ஜெயந்தி: போதைப் பொருள் எதிராக விழிப்புணா்வு மாரத்தான்

முதல்வா் வருகை: நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆட்சியா் ஆய்வு!

திருமலை காவல் துறைக்கு ப்ரீத் அனலைசா் கருவிகள்: தேவஸ்தானம் வழங்கியது

SCROLL FOR NEXT