சென்னை

இந்தியாவில் தயாராகும் 14% ஐ-போன்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

Din

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்துவருகிறது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பு 1,400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் 7 ஐ-போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

மத்திய அரசு ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது ஐ-போன்களுக்கான தயாரிப்பு மையமாக்கிவருகிறது.

நாட்டில் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ஐ-போன்களைத் தயாரித்துவருகின்றன. கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 67 சதவீத ஐ-போன்களையும், பெகாட்ரன் நிறுவனம் சுமாா் 17 சதவீத ஐ-போன்களையும் தயாரிக்கின்றன.

ஐ-போன்கள் தற்போதும் சீனாவில்தான் பெரும்பான்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அந்த ரக அறிதிறன் பேசிகளின் மிகப் பெரிய சந்தையாக சீனாதான் திகழ்கிறது.

ஆனால், ஹவாய் போன்ற உள்ளூா் நிறுவனங்களின் போட்டி, பணியிடங்களில் ஐ-போன்களைப் பயன்படுத்துவதற்கு அரசு விதித்துள்ள தடை போன்ற காரணங்களால் அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்துவருகிறது.

இதன் காரணமாக, தனது ஐ-போன் உற்பத்திக்காக இந்தியாவின் பக்கம் ஆப்பிள் நிறுவனம் கவனத்தைத் திருப்பியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT