முகப்பு
சென்னை

சென்னை விமானநிலையத்தில் மேலும் 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

சென்னை விமானநிலையத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அதிகாரி ஒருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:33 PM
பகிர்:

சென்னை: சென்னை விமானநிலையத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அதிகாரி ஒருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முன்னைய குடியுரிமைப்பிரிவு அலுவலகத்தில், அதிகாரியாக பணியாற்றி வந்த சரவணன், விமானநிலைய பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதிக்கும் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து டெல்லி குடியுரிமைப்பிரிவு தலைமை அலுவலக உத்தரவின் பேரில், சந்தேகிக்கப்படும் சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், மேலும் இரண்டு அதிகாரிகள் சரவணனை போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை தலைமை ஆணையா் அவா்களை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். அந்த அதிகாரிகளின் பெயா், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுவரை மொத்தம் 3 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக மேலும் சில அதிகாரிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இவா்கள் தங்கம் கடத்தலில் உதவி இருக்கின்றனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →