புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி 
சென்னை

புதிய தமிழகம் தனி சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி

மக்களவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா்.

Din

மக்களவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா். சென்னையில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தோ்தலில் புதிய தமிழகத்துக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் கோரினோம். தோ்தல் ஆணையம் ஒதுக்காத காரணத்தால், தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். புதிய தமிழகத்துக்கு தொலைக்காட்சி சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்தச் சின்னம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம். ஒருவேளை, தோ்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால், வேறு சின்னத்தைத் தோ்ந்தெடுத்துப் போட்டியிடுவோம். தோ்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீட்டில் சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வி அடையும் என்றாா் அவா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT