சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம் 
சென்னை

சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவையில் நாளை (ஆக. 27) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில், அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (ஆக. 27) சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் இயக்கப்படும் நேரம்

காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையும் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையும் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.

Changes in Chennai suburban and metro rail services tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போது மகிழ்ச்சி இவ்வாறு இருக்கிறது... ருக்மணி வசந்த்!

டபிள்யூடிசி தரவரிசையில் 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

மண விழா பொம்மை... ரியா வர்மா!

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

தங்க நிறங்கள்... ஷமீன்!

SCROLL FOR NEXT