இண்டிகோ (கோப்புப்படம்) 
சென்னை

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து.

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 41 இண்டிகோ விமான சேவைகள் இன்று(டிச. 9) ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

18 புறப்பாடு மற்றும் 23 வருகை என மொத்தம் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்களும், தில்லி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான சேவைகள் டிச.10-க்குள் நிலைமை சீராக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

41 IndiGo flights cancelled at Chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மீது கற்கள் வீச்சு: கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

மெட்ரோ கட்டுமான பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

கூடுதல் மருத்துவ இடங்கள்: சான்றுகளை வழங்க என்எம்சி அறிவுறுத்தல்

தலைநகரை அழகானதாக மாற்ற ஐஓசியுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் வேலைநிறுத்தம் துறைமுகங்களில் பணிகள் பாதிப்பு

SCROLL FOR NEXT