சென்னை

ரூ. 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 31) மாலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 31) மாலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே, இன்று (டிச. 31) காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,00,400-க்கு விற்பனையான நிலையில், மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் மீண்டும் ரூ. 560 குறைந்து ரூ. 99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,480-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 960 குறைந்துள்ளது.

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.257-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 குறைந்து, ரூ.2,57,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்றங்களை கண்டு வரும்போது, இதுபோன்ற விலை குறையும் இயல்பான ஒன்றுதான் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

In Chennai, the price of 22-karat gold has decreased by Rs. 560 per sovereign this evening (December 31).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என வெட்கமே இன்றி கூறுகிறார் அமைச்சர்: இபிஎஸ் கடும் கண்டனம்!

புள்ளியல் ரீதியாக முடிவடைந்த வடகிழக்குப் பருவமழை!

இந்தியா - பாக். போருக்கு மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 31.12.25

ரியோவின் ராம் இன் லீலா..! படப்பிடிப்பு விடியோ!

வலுவான டாலரால் தங்கம், வெள்ளி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT