சென்னை

தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று வேளை இலவச உணவு நவ.15- இல் தொடக்கம்

சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவ.15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் நவ.15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.64.73 கோடி செலவிடப்படவுள்ளது. அதன்படி மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளா்கள் பயனடையவுள்ளனா். அவா்களுக்கு காலை, மதியம், இரவு நேரங்களில் வழங்கப்படவுள்ள உணவு பட்டியலும் மாநகராட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற நவ.15-ஆம் தேதி கலைவாணா் அரங்கில் நடைபெறவுள்ள விழாவில், இலவச உணவுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

SCROLL FOR NEXT