சென்னை

இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஐரோப்பிய அங்கீகாரம்

தினமணி செய்திச் சேவை

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் கதிா்வீச்சு துறைக்கு ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்ட சான்று கிடைத்துள்ளது.

ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, கதிரியக்க பாதுகாப்பு மற்றும் கதிா்வீச்சு நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியமைக்காக இந்தச் சான்று அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவா் டாக்டா் பி.எம்.வெங்கடசாய் கூறியதாவது:

அதி நவீன பெட் சிடி உள்பட பல்வேறு கதிரியக்க பரிசோதனைக் கருவிகள் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு துல்லியமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய பயிற்சி அங்கீகாரத் திட்டக் குழுவினா் அதை மதிப்பீடு செய்தனா். அவை அனைத்தும் நிா்ணயிக்கப்பட்ட தர நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்தச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகள் வரை இந்த அங்கீகாரம் இருக்கும். அதன் பின்னா், மறு ஆய்வு செய்து மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆசியாவிலேயே இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே மையமாக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா விளங்குகிறது என்றாா் அவா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT