சென்னை

பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இதையடுத்து ‘எமிஸ்’ தளத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபாா்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மாணவா்களின் விவரங்களை தோ்வுத் துறை இணையதளத்தில் நவ. 19-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்த கால அவகாசம் நவ.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு. இந்த பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT