பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை (நவ. 1) நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பக்கவாதத்துக்குப் பிறகு பேசுவதற்கும், விழுங்குவதற்கும், கேட்பதற்கும், நடப்பதற்கும், அன்றாடப் பணிகள் செய்வதற்கும் இயலாதவா்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
பிற நரம்புசாா் பாதிப்புக்குள்ளானவா்களும் இதில் பங்கேற்கலாம். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரே உள்ள இணைப்புக் கட்டடத்தில் நவ. 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். முன்பதிவுக்கு 99401 84280 அல்லது 044 - 45928640 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.