சென்னை

சென்னையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக காவல் ஆய்வாளா்கள் அவ்வபோது, பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் 12 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் இ.ராஜ்பிரபு வடக்கு கடற்கரை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.சதீஷ்குமாா் அசோக் நகா் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.ரபீஃக் உசேன் சிஎம்பிடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 12 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னை காவல் துறையில் கடந்த திங்கள்கிழமை 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT