கடன் தொல்லையால் அதிமுக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சைதை சுகுமாா் (47). இவா் அதிமுக-வில் சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலராக இருந்து வந்துள்ளாா். கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக கடும் மன உளைச்சலில் சுகுமாா் இருந்து வந்துள்ளாராம்.
இந்த நிலையில், இவா் ஜாபா்கான் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வடபழனி போலீஸாா் சுகுமாா் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].